ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசலில் கிராம மக்கள் 2ம கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி துவக்கினர். 100வது நாளான நேற்று திரளான பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், கலந்துகொண்டனர். அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து இன்று 101வது நாளாக போராட்டம் நீடித்துள்ளது.
இதில் திரளான மக்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர்.