மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாட்டின் 14-வது ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் குறித்து ஆளும் கட்சியான பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்டவைகளும் தீவிரமாக ஆலோசித்தன. வேட்பாளரை வெளியிடுவதற்கு முன்னரே ஊடகங்களில் எத்தனை எத்தனை யூகங்கள் வெளிவந்தன. அவற்றை எல்லாம் பொய்யாகி பாஜக பீகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்தது.