Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

12வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்ற பெடரர்!

July 13, 2017
in Sports
0
12வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்ற பெடரர்!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் 12-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். முன்னணி வீரரான ஜோகோவிச் காயம் காரணமாக விலகினார்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

7 முறை சாம்பியனும், உலகின் 3-ம் நிலை வீரருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) கால்இறுதியில் 6-வது வரிசையில் இருக்கும் கனடா வீரர் ரோனிக்கை எதிர்கொண்டார்.

இதில் பெடரர் 6-4, 6-2, 7-6 (7-4) என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். அவர் விம்பிள்டன் போட்டியில் 12-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார். மேலும் அதிக வயதில் தகுதி பெற்ற 2-வது வீரர் என்ற பெருமையை பெடரர் பெற்றார்.

அவருக்கு தற்போது 35 வயதாகிறது. இதற்கு முன்பு 1974-ம் ஆண்டு சென்ரோஸ்வெல் (ஆஸ்திரேலியா) என்பவர் தனது 39-வது வயதில் விம்பிள்டன் அரை இறுதியில் நுழைந்து இருந்தார்.

ரோஜர் பெடரர் அரை இறுதியில் 11-ம் நிலை வீரர் தாமஸ் பெர்டிச்சை (செக்குடியரசு) சந்திக்கிறார். அவர் இரண்டாம் நிலை வீரர் ஜோகோவிச்சுக்கு எதிரான கால்இறுதியில் முதல் செட்டை 7-6 (7-2) என்ற கணக்கில் வென்றார்.

2-வது செட்டில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஜோகோவிச் காயத்தால் விலகினார். இதனால் பெர்டிச் வென்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் 2-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.

மற்றொரு அரை ஆட்டத்தில் சிலிச் (குரோஷியா)- சாம்குயரி (அமெரிக்கா) மோதுகிறார்கள். சாம்குயரி கால்இறுதியில் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான ஆன்டி முர்ரேயை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி இருந்தார்.

இன்று நடைபெறும் பெண்கள் அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள் விவரம்:-

1. கார்பன் முகுருஜா (ஸ்பெயின்)- ரைபரி கோவா (சுலோவாக்கியா).

2. ஜோகன்னா ஹோன்டா (இங்கிலாந்து)- வீனஸ் வில்லியம்ஸ்.

முகுருஜா-ரைபரிகோவா மோதிய போட்டியில் இருவரும் தலா 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தனர். வீனஸ் வில்லியம்சுக்கு எதிராக கோன்டா 3-2 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளார்.

Previous Post

நடிகர் திலீப்பின் மேனேஜர் தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு

Next Post

லோதா பரிந்துரைகளுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்

Next Post
லோதா பரிந்துரைகளுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்

லோதா பரிந்துரைகளுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures