கரு நிலையில் உள்ள மூன்று குழந்தைகள், உறையவைக்கப்பட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம், இன்று Lorient யில் நடந்துள்ளது. இங்குள்ள மீன்பிடித் துறைமுகத்திலுள்ள ஒரு படகின் குளிர் அறையினுள் காவற்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மீன்பிடிப்படகின் குளிர்பதன அறையினுள் ஒன்றும், இந்தக் கருக்களின் தாயின் வீட்டின் ஆழ் குளிர்பதனப் பெட்டியினுள் இரண்டுமாக மூன்று கொல்லப்பட்டகருக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கருக்களின் தாய் எனக் கருதப்பபடும் பெண்ணின் வீட்டில் நடாத்தப்பட் ட சோதனையிலேயே, இவை கண்டடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பெண் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், Lorientயின், அசரப்பரிதிநிதி சட்டத்தரணி Laureline Peyrefitte தெரிவித்துள்ளார். கருக்களின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே நீதிவிசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.