தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருந்ததாக கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் குழுக் கூட்டத்தில் நேற்று புதன்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யார் உருவாக்கினார்கள் என்பது முக்கியமல்ல. கூட்டமைப்பின் பெயரை சொல்லியே நாம் அரசியலில் அடையாளத்தை காட்டியுள்ளோம். தமிழரசு கட்சியின் சார்பில் நாம் அரசியலில் பிரவேசிக்கவில்லை. கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயற்பட்டு இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருந்தது உண்மையே.” என்றுள்ளார்.