கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் அரசாங்கத்தில் நான் எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கமாட்டேன் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையை சரத் பொன்சேக்கா முன்னெடுத்து வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் அரசாங்கத்தில் நான் எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கமாட்டேன் என தெரிவித்திருந்தார்.
அத்துடன் போலியான செய்திகளை நம்பவேண்டாமென பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள சரத் பொன்சேகா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு காலிமுகத்திடலில் இடம்பெறும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.