உகண்டாவில் நிகழ்ந்த பஸ் விபத்தில், அதில் பயணம் செய்த, 7 சிறார்கள் உட்பட, 20 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஆபிரிக்க நாடான உகாண்டாவின் போர்ட் போர்ட்டல் நகரில் இருந்து தலைநகர் கம்பாலாவுக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.
மலைப் பதையில் சென்று கொண்டிருந்த இந்த பஸ், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஏழு சிறார்கள் உட்பட, 20 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.