நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் மிஹிப்பிட்டிய கிராம சேவகர் பிரிவின் மாதெய்யாவ கிராமம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியல்ல காவற்துறை பிரிவின் மாட்டுவாகல தோட்ட மேற்பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை காவல்துறை பிரிவின் மருதமுனை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் சுதுகம்பல மேற்கு மற்றும் கிழக்கு கிராமசேவகர் பிரிவுகளின் விஹாரை வீதி, விஹாரை ஒழுங்கை, கப்பர தேவாலய வீதி, வெலமெத்த பாரகம பகுதி என்பனவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.