கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனை காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,391 ஆக அதிகரித்துள்ளது.