Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

தமிழர் பிரச்சினைகளுக்குக் தீர்வு வேண்டும் – ரணில்

July 5, 2021
in Sri Lanka News
0
தமிழர் பிரச்சினைகளுக்குக்  தீர்வு வேண்டும் – ரணில்

ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வு ஒன்றுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனூடாகவே தமிழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வை எட்ட முடியும். அவர்களின்  பிரச்னைகளுக்குக் கட்டாயம்  தீர்வு காணப்பட வேண்டும்.”

– என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“தமிழ்மொழி தொடர்பான சட்ட அமுலாக்கம் உட்பட ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. அவற்றுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையின் உள்நாட்டுப் போர் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திகளை முடக்கிவிட்டது. எமது ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திகள் குறித்து பாரிய செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஒத்துழைத்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மிக ஆர்வமாக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருந்தனர்.

எதிர்காலத்திலும் வடக்கின் அபிவிருத்திகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்படும்.

30 வருட காலப் போர் காரணமாக யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாமல் போனது. எனவே, இங்கு தொழில் வாய்ப்புக்களும் வாழ்வாதார ஊக்குவிப்புக்களும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறில்லையெனில் அங்கு வாழும் இளையோரின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிவிடும். மறுபுறம் தமிழ் மொழி தொடர்பான சட்ட அமுலாக்கம் உட்பட ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. அவையும் தீர்க்கப்பட வேண்டும்.

அதேபோன்று தமிழ் மக்களின் அரசியல் பிரச்னைகளுக்கும் தீர்வு எட்டப்பட வேண்டும். ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வு ஒன்றுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனூடாகவே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்ட முடியும். அவர்களின்  பிரச்சினைகளுக்குக் கட்டாயம்  தீர்வு காணப்பட வேண்டும்” – என்றார்.

Previous Post

புகழ்பெற்ற கோமதேஸ்வரர் ஆலயம்- கர்நாடகா

Next Post

பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்

Next Post
பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்

பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

August 29, 2026
தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

தீர்மானம் மிக்க சுப்பர் லீக் போட்டியில் றினோன் – புளூ ஸ்டார் இன்று மோதுகின்றன

August 29, 2026
கோதுமை மா விலை உயர்வை தொடர்ந்து பராட்டா, ரொட்டி விலைகளும் உயர்வு!

கோதுமை மா விலை உயர்வை தொடர்ந்து பராட்டா, ரொட்டி விலைகளும் உயர்வு!

August 29, 2026
தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ; காணாமல் போன உறவுகளின் சங்கம்!

தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ; காணாமல் போன உறவுகளின் சங்கம்!

August 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures