நாட்டின் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும். சில இடங்களில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும்.
மத்திய, வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் (30-40) கிலோமீற்றர் வரை வீசும். இந்த பகுதிகளில் சில நேரங்களில் காற்றின் வேகம் 50 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்க வாய்ப்புண்டு.
புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரை கொழும்பு, காலி மற்றும் மாத்தறை வழியாக கடலோரப் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இன்று பெரும்பாலும் கடற் பகுதிகளில் தெற்கு நோக்கி காற்று வீசும் அதேவேளை காற்றின் வேகம் (30-40) கிலோமீற்றர் வேகத்தில் இருக்கும். எனவே கடலோர பகுதிவாழ் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.