தோனி’ பட நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜுன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் சுஷாந்த் காதலி ரியா சக்ரவர்த்தி போதைப் பொருளை வாங்கி கொடுத்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரியாவுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கமில்லை என தகவல்கள் வெளியாகின. ஆனால், ரியாவும், சுஷாந்தும் புகை பிடிக்கும் வீடியோ ஒன்று வட இந்திய டிவி சேனல் ஒன்றில் நேற்று ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் இருவரும் புகைப்பது சாதாரண சிகரெட் போலத் தெரியவில்லை. அந்த வகை சிகரெட்டை வட இந்திய ஊடகங்கள் ‘சுருட்டப்பட்ட சிகரெட்’ எனக் குறிப்பிடுகின்றன. அப்படிப்பட்ட சிகரெட்டுகளில் போதைப் பொருளை உள்ளே வைத்து சுருட்டி புகைப்பார்கள் என்று சொல்கிறார்கள். இது போன்ற வீடியோக்களால் தான் ரியா சக்ரவர்த்தியின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டதாகத் தகல் வெளியாகி உள்ளது.
ரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலமாக மும்பை, கோவா உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் போதைக் பொருள் தடுப்புப் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்களாம். இதனால், மேலும் சில சினிமா பிரபலங்கள் கைதாகக் கூடும் எனத் தெரிகிறது.

