நாடுமுழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாளை(செப்.,17) நடைபெற இருக்கிறது. கொரோனா காலம் என்பதால் கடும் கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரையில் நீட் தேர்வு எழுத இருந்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வுக்கு தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் இப்போது இந்த சம்பவம் இன்னும் பரபரப்பாக்கி உள்ளது.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில், ”மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?. மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை!” என பதிவிட்டுள்ளார்.

