கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் கடந்த இந்த மாத காலமாக நடைபெறாத நிலையில், ஒரு ஐபோன் மூலமாக மலையாளத்தில் ‘சீ யூ சூன்’ என்கிற ஒரு படத்தையே தயாரித்து, நடித்து வெளியிட்டுள்ளார் நடிகர் பஹத் பாசில். விஸ்வரூபம் பட எடிட்டர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இந்தப்படம், சில தினங்களுக்கு முன் ஓடிடியில் ரிலீஸானது.
கேரளா தாண்டியும் வரவேற்பை பெற்றுள்ள இந்தப்படத்தை பார்த்துவிட்டு, நடிகை த்ரிஷா, “இந்த 2020ஆம் வருடத்தின் சிறந்த படம் இது” என பாராட்டியுள்ளார். சுமார் ஒன்றரை மணி நேரமே ஓடக்கூடிய இந்த படம், வெகு சில நடிகர்களோடு, பஹத் பாசிலின் வீட்டையே லொக்கேசனாக மாற்றி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

