ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷா பந்தன். பெண்கள் அவர்களது நலனுக்காக என்றும் உறுதுணையாக இருக்கும் சகோதரர்களுக்காக அவர்களது கையில் ராக்கி கயிறு கட்டுவது வழக்கம்.
வட இந்தியாவில் இந்த நாள் விமரிசையாகக் கொண்டாடப்படும். சகோதரர்கள் உள்ள ஹிந்தி நடிகைகள் கங்கனா ரணாவத், சாரா அலிகான் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இன்று அவர்களைப் பற்றிப் பதிவிட்டு ராக்கி கயிறு கட்டுவதைப் பதிவிட்டு வருகிறார்கள். அவர்கள் மட்டுமல்லாது பல தென்னிந்திய நடிகைகளும் அவர்களது சகோதரர்களுடன் இதைக் கொண்டாடி வருகிறார்கள்.
நடிகைகள் ஹன்சிகா, ரகுல் ப்ரீத் சிங், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் ஒவ்வொருவராக அவர்களது இன்றைய ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.