ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசையை முறுக்கு படத்தில் அவரது நண்பராக நடித்த ஆனந்த், தற்போது நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
குமாரவேல், டயானா வைஷாலினி, லீலா, ஆனந்த், பவானிஸ்ரீ, ஆர்.ஜே.விஜய், பூர்னேஷ், வில்ஸ்பட், இப்ரான், சபரீஷ், ஆர்.ஜே.ஆனந்தி, மோனிகா சின்ன கோட்லா ஆகியோர் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்க, தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி ஆனந்த் கூறியதாவது: நட்பு என்பது மகிழ்ச்சிக்கானது மட்டுமல்ல, அது நிபந்தனையற்ற பந்தம். ஒவ்வொருவரிடமும், குறிப்பாக பதின் பருவத்தினரிடையே நேர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. இந்தப் படம் ஒவ்வொருவரையும் நட்பை நினைக்கச் செய்து மகிழ்ச்சியூட்டும். இளம் பிராயத்தினரை கதைக் களமாகக் கொண்ட முழுமையான பொழுது போக்குப் படமாகும். என்றார்.