கொரோனா ஊரடங்கில் நான்கு மாதங்களுக்கும் மேலாக சினிமா பிரபலங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவர்களது பொழுதைப் போக்க என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் சிலரது வீடியோக்களும், போட்டோக்களும் தான் நிரம்பி வழிகின்றன. ஒரு சில முன்னணி நடிகைகள் எப்போதோ ஒரு முறைதான் எதையாவது பதிவிடுகிறார்கள். அவர்களில் அஞ்சலியும் ஒருவர்.
நேற்று இரவு திடீரென இரண்டு போட்டோக்களைப் பதிவிட்டு ஒரு பொன்மொழியை உதிர்த்திருக்கிறார். “எல்லா மினுமினுப்பும் மங்கினாலும், அவளது நரம்புகளில் நட்சத்திரம் இருக்கும்,” என பதிவிட்டுள்ளார்.
நான்கு மாதங்களாக கேமரா முன்னாடி நின்று நடிக்காமல் பலருக்கும் போரடித்துப் போய் இருக்கிறது. சீக்கிரமே படப்பிடிப்பு ஆரம்பமானால் தான் அவர்களுக்கு நிம்மதி.