கொரோனா தாக்கம் காரணமாக உலகமெங்கும் கடந்த மூன்று மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு சில நாடுகளில் மட்டும் கடந்த மாதத்தில் இருந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பிகில் படம் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மறு திரையிடல் செய்யப்பட்டன. இந்தநிலையில் இலங்கையிலும் பிகில் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மறு திரையிடல் செய்யப்பட்டுள்ளது.