திருமணம் ஆனாலும் கூட விடாமல் நடிப்பை தொடர்ந்து வரும் சமந்தா, காதல் கதைகளிலும் தயக்கம் காட்டாமல் நடித்து வருகிறார். அதேசமயம் கதாநாயகியை மையப்படுத்திய, தனது நடிப்புக்கு சவால்விடும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுகிறார். ஏற்கனவே அவர் அப்படி நடித்த யு-டர்ன், ஓ பேபி ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் கதையின் நாயகியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சமந்தா.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆந்திராவின் சமூக சேவையாளர் நாகரத்னம்மாவின் சுயசரிதை படமாக்கப்பட இருக்கிறது என்கிற தகவல் வெளியானது. தற்போது அந்த கதையில் நடிப்பதற்குத்தான் சமந்தாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். கடந்த இரண்டு வருடங்களில் சமந்தாவின் நடிப்புத்திறமை இன்னும் கூடியிருப்பதால், இந்தப்படத்தில் வசனங்கள், உடல் மொழி என சமந்தாவுக்காகவே பார்த்து பார்த்து சில மாற்றங்களையும் செய்துள்ளார்களாம்.