‘வாத்தி எப்ப கம்மிங்’ என ‘மாஸ்டர்’ படத்தின் வருகைக்காக விஜய் ரசிகர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏப்ரல் 9ம் தேதியே வந்திருக்க வேண்டிய படம். கொரோனா ஊரடங்கு காரணமாக எப்போது வரும் என்று தெரியவில்லை.
‘மாஸ்டர்’ படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் வரிசையில் சேர்ந்து விட்டது. அப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ தற்போது யு-டியுபில் 60 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஏற்கெனவே, இப்படத்தின் மற்றொரு பாடலான ‘குட்டி ஸ்டோரி’ பாடலும் 63 மில்லியனைக் கடந்துள்ளது.
படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே விஜய் பாடல்கள் 60 மில்லியனைக் கடந்துள்ளன. படம் ஏப்ரல் மாதமே வெளிவந்திருந்தால் அது இன்னும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கும். எப்போதும் படம் வெளிவந்த பின் அந்தப் பாடலை வீடியோவாகப் பார்த்தால் தான் ரசிகர்களை அதிகமாக ரசிக்க வைக்கும்.
‘மாஸ்டர்’ படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

