கொரானோ ஊரடங்கு காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்ட காரணத்தால் ஓடிடி தளங்களில் நேரடியாக படங்களை வெளியிடும் முறையில் இறங்கியது அமேசான் பிரைம்.
அந்த ஒரு பரபரப்பை ஏற்படுத்திய அமேசான் இலவச விளம்பரத்தைத் தேடிக்கொண்டது. மற்ற ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்றவையும் அது போன்று படங்களை வெளியிட களத்தில் உடனடியாக குதித்தன.
அதில் தற்போது நெட்பிளிக்ஸ் தன்னுடைய முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜான்வி கபூர் நடித்துள்ள ‘குஞ்சன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’ படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இப்படத்தை விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். ஜான்வி கபூர் நடித்துள்ள மற்றொரு படமான ‘ரூஹி அப்சானா’ படம் கூட ஓடிடி தளத்தில்தான் நேரடியாக வெளியாகும் என்கிறார்கள்.
இந்த வாரம் ஜுன் 12ம் தேதி அமிதாப்பச்சன் நடித்துள்ள ‘குலாபோ சித்தாபோ’ படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. ஹிந்தியில் முதல் பெரிய வெளியீடு இதுதான்.

