தமிழ் சினிமாவை பொறுத்தவரை புதுப்புது இயக்குனர்களை அறிமுகப்படுத்துவதில் கேப்டன் விஜயகாந்த் தான் முதலிடம் பிடித்தவர் அந்தவகையில் மலையாள திரையுலகில் திறமையானவர்களை கண்டுபிடித்து அவர்களை இயக்குனர்களாக அறிமுகப்படுத்துவதில் மம்முட்டி தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.
இதுவரை அவர் சுமார் 70 பேரை இயக்குனர்களாக அறிமுகப்படுத்தி இருக்கிறாராம் விரைவில் தெலுங்கில் வெளிவர இருக்கும் யாத்ரா படத்தின் இயக்குனர் மஹி ராகவ் தான் அந்த 7௦வது இயக்குனராம்.
குறைந்த பட்சம் வருடத்திற்கு இரண்டு இயக்குனர்களாவது மம்முட்டி படத்தை இயக்குவதன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆகிறார்கள். தமிழில் பிரபலமாக இருக்கும் இயக்குனர் லிங்குசாமி (ஆனந்தம்), தரணி (எதிரும் புதிரும்) ‘மறுமலர்ச்சி’ பாரதி ஆகியோரை கூட இயக்குனர்களாக அறிமுகப்படுத்தியது மம்முட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது

