இந்தாண்டு முதல் தமிழகத்தில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதற்கான ஏற்பாடுகளிலும் தீவிரமாக இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, தமிழக அரசு, அந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதை நடிகர் சூர்யா வரவேற்றுள்ளார்.
அவர் தனது சமூகவலைதளத்தில், ‛‛படிக்கும் காலத்தில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானது என்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனை அளப்பதற்கு பொதுத் தேர்வு என்றும் தீர்வாகாது. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பு ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும்; தமிழக அரசுக்கும் நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.

