அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் பிகில். கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும் வசூல் சொல்லும்படி இருந்தது. கேரளாவில் விஜய் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். பிகில் படத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தார்கள்.
அந்த வகையில், கேரளாவில் வெளியான முதல்நாளே ரூ. 5 கோடி வசூலித்தது பிகில் படம். இது மோகன்லால், மம்மூட்டி படங்களே செய்யாத சாதனையாம். அதோடு கேரளாவில் பிகில் படம் மொத்தம் 19.6 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த கணக்கில் பார்க்கையில் இந்த 2019ம் ஆண்டு கேரளாவில் வெளியான தமிழ் படங்களில் விஜய் படமே அதிகப்படியாக வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக கார்த்தியின் கைதி 9.45 கோடியும், பேட்ட 8.5 கோடியும், காப்பான் 5. கோடியும், பேரன்பு 3.9 கோடியும், அசுரன் 2.5 கோடியும், விஸ்வாசம் 2.4 கோடியும், நேர்கொண்ட பார்வை 2.1 கோடியும், என்ஜிகே 1.9 கோடியும், கடாரம் கொண்டான் 1.6 கோடியும் கேரளாவில் வசூலித்துள்ளன.

