தமிழ், கன்னடம், தெலுங்கு, மொழிகளில் தயாராகும் படம் கோசுலோ. லட்சுமி, சுதாராணி, சாது கோகிலா, அச்சுதா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கன்னட தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் ஹெப்லிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பி.ஆர்.ராஜசேகர் தயாரித்துள்ளதுடன் கதை திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். கோபால் இசையமைக்க, ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்திரகாந்த் இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இந்தப்படம் சைகாலஜிகல் த்ரில்லர் ஆக உருவாகியுள்ளது. ஒரு மலை பிரதேசத்திற்கு ஒரு வயதான தம்பதி, ஒரு நடுத்தர வயது ஜோடி மற்றும் ஒரு இளைஞன் ஆகியோர் வருகின்றனர்.. அங்கே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை, அதை அவர்கள் எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பது தான் படத்தின் கதை. 3 மொழிகளில் படத்தின் துவக்கமும், கிளைமாக்சும் ஒரே மாதிரியாக இருக்கும். இடையில் நடக்கும் சம்பவங்கள் வெவ்வேறாக இருக்கும். என்றார்.