1996-ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘காலாபாணி’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தமான் சிறையில் சிக்கிய கைதிகளில் மலையாளியாக மோகன்லாலும், தமிழனாக பிரபுவும் நடித்திருந்தனர். தமிழில் இந்தப்படம் ‘சிறைச்சாலை’ என்கிற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கேயும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்ல இந்தப்படம் மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது.
கிட்டத்தட்ட 22 வருடங்கள் கழித்து மோகன்லாலும் பிரபுவும் மீண்டும் ஒரு மலையாளப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஆம்.. மீண்டும் இவர்களை இணைத்திருப்பது அதே இயக்குனர் பிரியதர்ஷன் தான்.. இந்த முறை மோகன்லாலை வைத்து குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை தலைவன் கதையை அரபிக்கடலிண்டே சிம்மம் என்கிற பெயரில் இயக்கி வருகிறார். இதில் பிரபுவையும் முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார் பிரியதர்ஷன்.