2021 தேர்தலில் அரசியலில், தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நடிகர் ரஜினி கூறியதாவது: கோல்டன் ஐகான் என்ற சிறப்பு விருதுக்கு தமிழக மக்கள் தான் காரணம். அந்த விருதை தமிழக மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
நானும், கமலும் இணைந்தால் யார் முதல்வர் என்பது குறித்துதேர்தல் நேரத்தில், அப்போது உள்ள சூழ்நிலையில், அப்போது எடுக்க வேண்டிய முடிவு. கட்சி துவங்கும் போது, உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். அப்போது, இது குறித்து சொல்கிறேன். அதுவரை பேசவிரும்பவில்லை. 2021ல் அரசியலில், தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

