
லைகா புரொக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘2.0’ படம் இன்னும் சில தினங்களில் நவம்பர் 29ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம் முதல் நாளில் ஒரு மிகப் பெரும் தொகையை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலரும் அது பற்றிய கணக்கை வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி 2.0 படம் முதல் நாளில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டும் என்கிறார்கள்.
படம் வெளியாகும் தினம் வியாழக்கிழமை, மறுநாள் வெள்ளிக்கிழமையும் வேலை நாள் எனவே அந்த இரண்டு நாட்களில் வசூலாகும் தொகையை விட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வசூலாகும் தொகையும் அதிகமாக இருக்கலாம். முதல் நாளில் 100 கோடி கடந்தால் 4 நாட்களிலேயே இப்படம் 500 கோடி வசூலைத் தொட வாய்ப்புள்ளது.
படம் நன்றாக இருந்தால் அந்த வசூல் அதற்கடுத்த நாட்களிலும் தொடரும். அப்படி நடந்தால் ‘2.0’ படம் நிச்சயம் ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கலாம்.