நடிகை சோனா, ‘செக்ஸ் தேவைப்படும்போது ஆண்களை டிஷ்யு பேப்பராக பயன்படுத்துவேன்’ என கூறியதாக ஒரு வார இதழில் பேட்டி வெளியானது. பின், தான் அவ்வாறு கூறவில்லை என்றார்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக, அவ்வமைப்பின் தலைவர், வழக்கறிஞர் அருள் துமிலன், ‘அவதுாறாக பேசிய, சோனா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை ஏற்கக்கூடாது என சோனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதன் இறுதி விசாரணை, 16ம் தேதி நடக்க உள்ளது.
இது குறித்து அருள் துமிலன் கூறுகையில், சோனா பேசியது, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 200ன் படி தவறு. குற்றம் நிரூபணமானால், அவருக்கு அதிகபட்சம், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உண்டு,” என்றார்.

