காஜல் அகர்வால் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் லட்சுமி கல்யாணம். தெலுங்கில் தேஜா இயக்கிய இந்த படத்தில் கல்யாண் ராம் நாயகனாக நடித்திருந்தார். 2007ல் அப்படம் வெளியானது. அதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் எம்எல்ஏ என்ற படம் மூலம் கல்யாண் ராமுடன் இணைந்துள்ளார் காஜல் அகர்வால். மார்ச் 23-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
தான் நாயகியாக நடித்த முதல் படமான லட்சுமி கல்யாணம் வெற்றி பெற்று தனக்கு திருப்பு முனையை கொடுத்ததைப்போன்று இந்த எம்எல்ஏ படமும் பெரிய ஹிட்டடிக்கும் என்று கூறியுள்ள காஜல் அகர்வால், தற்போது அப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கல்யாண்ராமுடன் கலந்து கொண்டு வருகிறார். அவே படத்திற்கு பிறகு காஜல் நடிப்பில் வெளியாகும் இந்த படத்திற்கு தெலுங்கில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.