கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளார் இசைமைப்பாளர் டி.இமான்.
இசைமைப்பாளர் டி.இமான் 18 வயதிலே தனது முதல் படமான இளைய தளபதி விஜய் நடித்த ‘தமிழன்’ படத்திற்கு இசைமைத்தார். பெரும் வெற்றி படமானது, அப்படத்தின் உள்ள அனைத்து பாடல்களும் ஹிட்.
தற்போது முன்னணி இசைமைப்பாளராக வலம் வருகிறார் இமான். சீமராஜா, வணங்காமுடி, விசுவாசம் ஆகிய படங்களுக்கு இசைமைத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, பல விருது வழங்கும் விழாவிற்கு வந்த இமான் ஸ்லிம்மாக தோற்றம் அளிக்கிறார். அவரிடம் பலரும் இது பற்றி கேட்ட நிலையில், தற்போது அவரது டுவிட்டர் பக்கத்தில்,
‘எதுவும் சாத்தியம் இல்லை என்று இல்லை. சிலர், நான் எடையைக் குறைத்த பிறகு தான் ஃபிட்டாக இருப்பதாக கூறுகின்றனர். அதிலும் சிலர், முன்பே நீங்கள் கியூட்டாக தோற்றம் அளித்தீர்கள் என்றும் கூறினர். எதுவாக இருந்தாலும் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருப்பதே எனக்கு நல்ல உண்ரவைத் தருகிறது.
நான் உடல் எடையைக் குறைக்க கடுமையாக உழைத்தேன். இதற்காக நான் இயற்கை முறைகளைத்தான் கடைபிடித்தேன். கொஞ்சம் காலம் தாமதமானாலும் இயற்கை முறை தான் சிறந்தது. அதனால் தினமும் உடற்பயிற்சி மற்றும் முறையான டயட் மூலம் ஒரு வருடத்தில் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளேன்.
முன்னதாக 117 கிலோ இருந்தேன் இப்போது 75 கிலோ உள்ளேன். இதைப் பற்றி பலர் கேள்வி எழுப்பியதால் நான் இதை சொல்கிறேன். இது யாரோ ஒருவரையாவது உற்சாகப்படுத்தினால், எனக்கு மகிழ்ச்சி’ எனப் பதிவிட்டிருந்தார்.
