Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்

December 14, 2018
in Cinema
0

ஆன்லைன் ஷாப்பிங் செயலியான அமேசான் வாயிலாக, விலை உயர்ந்த, ஹெட்போன் வாங்கிய நடிகை சோனாக்ஷிக்கு, துருப்பிடித்த கம்பிகள் அனுப்பப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஹெட்போனுக்கு பதில் துருப்பிடித்த கம்பிகள்

பிரபல பாலிவுட் நடிகரும், பா.ஜ., அதிருப்தி, எம்.பி.,யுமான, சத்ருஹன் சின்ஹாவின் மகள், நடிகை சோனாக்ஷி, 31. ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ரஜினியுடன், லிங்கா படத்தில் நடித்திருந்தார்.

அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் செயலியில், 18 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஹெட்போன் ஒன்றை, சோனாக்ஷி, சமீபத்தில் முன்பதிவு செய்தார். சமீபத்தில், அதற்கான, பார்சல் அவரது வீட்டில், டெலிவரி செய்யப்பட்டது. பெட்டியை ஆவலுடன் திறந்து பார்த்தவருக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. அதன் உள்ளே, ஹெட்போனுக்கு பதிலாக, துருப்பிடித்த இருப்பு கம்பிகள் இருந்தன. இதைப் பார்த்த சோனாக் ஷி அதிர்ச்சி அடைந்தார்.

மன்னிப்பு

இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் தகவல் பகிர்ந்தார். இதற்கு உடனடியாக, அமேசான் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, சரியான பொருள் விரைவில் ஒப்படைக்கப்படும் என, அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடிகர் நகுல், தனது மனைவிக்கு விலையுர்ந்த பரிசு ஒன்றை, ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அவருக்கு மிகவும் விலை குறைந்த மொபைல் அனுப்பி வைத்திருந்தனர்.

Previous Post

நீலகுயில், சிவா மனசுல சக்தி : விஜய் டிவியில் 2 புதிய தொடர்கள்

Next Post

விஸ்வாசத்திற்கு மீண்டும் குடைச்சல்

Next Post

விஸ்வாசத்திற்கு மீண்டும் குடைச்சல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures