இரும்புத்திரை படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து ‛ஹீமோ’ எனும் படத்தை இயக்கி உள்ளார் மித்ரன். கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்க, அர்ஜூன், அபய் தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 1.32 நிமிடம் ஓடக் கூடிய இந்த டீசரில், கல்வி மற்றும் அதில் நடக்கும் முறைகேடுகள் பற்றி பேச உள்ளனர். அபய் தியோல் வில்லனாக வருகிறார். சிவகார்த்திகேயனை பின்னால் இருந்து இயக்கும் ஆலோசகராக அர்ஜூன் இருப்பார் என தெரிகிறது.

