ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் ஹீமா பிந்து. இவர் காரத்தே பயிற்சி பெற்ற வீராங்கணை பல போட்டிகளில் பங்கேற்று விருதுகளும் வென்றிருக்கிறார். தற்போது இவர், தாம்பூலம் என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக கன்னடத்தில் வளர்ந்து வரும் நடிகரான சச்சின் புரோகித் நடிக்கிறார். பாரதி ராமன் என்ற புதுமுகம் இயக்குகிறார். கணேஷ் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார், கபிலேஷ்வர் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் பாரதி ராமன் கூறியதாவது:
இது குடும்ப பின்னணியில் தயாராகும் சஸ்பென்ஸ் திரில்லர். தமிழ், கன்னடத்தில் தயாராகிறது. படத்தின் நாயகி கராத்தே வீராங்கணையாக இருந்தாலும் முறைப்படி நடனம் கற்றவர், தற்போது முன்னணி மாடல் அழகியாகவும் இருக்கிறார். இந்தப் படத்திற்கு பிறகு ஹீமா பிந்து நடிப்பில் ஒரு ஆக்ஷன் படம் உருவாக்கும் எண்ணமும் உள்ளது. என்றார்.

