ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார் நடித்து வெளியாகியுள்ள படம் 2.0. இந்த படத்தில் அக்சய் குமார் நடித்திருப்பதால் ஹிந்தி பதிப்பையும் பிரமாண்டமாக வெளியிட்டனர். அந்த வகையில் வட இந்தியாவில் 4 ஆயிரம் தியேட்டர்களில் 2.0 படம் திரையிடப்பட்டுள்ளது.
முதல்நாளில் இப்படம் ரூ.18 கோடி வசூலித்திருக்கிறது. சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என்பதால் இன்னும் அதிகப்படியாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ராஜமவுலியின் பாகுபலி-2 படம் ஹிந்தியில் முதல்நாள், ரூ. 47 கோடி வசூலித்திருந்தது. அந்தவகையில் பாகுபலி 2விடம் 2.0 முதல்நாள் வசூலில தோல்வியை சந்தித்துள்ளது.