தனுஷ் – வெற்றி மாறன் கூட்டணியில் முன்பு வெளியான படம் ‛பொல்லாதவன்’. இந்தப் படத்தை, தற்போது ஹிந்தியில் ரீ-மேக் செய்கின்றனர். இந்தப் படத்துக்கு ‛கன்ஸ் ஆப் பனாரஸ்’ என பெயர் சூட்டி இருக்கின்றனர்.
கர்ணன் நாத், நடாலியா, அபிமன்யு சிங் ஆகியோருடன் பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன் முக்கியமான பாத்திரம் ஒன்றில் தோன்றுகிறார். தெலுங்கு இயக்குநர் சேகர் சூரி இயக்குகிறார்.
ஏற்கனவே, பொல்லாதவன் திரைப்படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் ஆகியிருக்கும் சூழலில் தமிழ் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
தற்போது, இந்தியில் அடுத்த மாதம் 28ல் ரிலீஸ் ஆகிறது. அங்காவது வெற்றி பெறுமா?

