சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கண்ணே கலைமானே. இந்த படத்தில் விவசாயிகளுக்கு உதவி செய்யும் வங்கி அதிகாரி, கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தமன்னா. கதாநாயகியை மையப்படுத்திய கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த படம் வருகிற 22-ந்தேதி திரைக்கு வருகிறது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில் நடித்துள்ளேன். விவசாயம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் அதற்காக என்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டு நடித்திருக்கிறேன்.
படத்தின் பாடல் காட்சிகளை படமாக்கும்போது யுவன் சங்கர் ராஜா பாடல் தயார் செய்து தரவில்லை. அதனால் சில ஹிந்தி பாடல்களை போட்டுத்தான் பாடல் காட்சிகளில் எங்களை நடிக்க வைத்தார் இயக்குனர் சீனுராமசாமி. அப்படி படமாக்கிய காட்சிகளை வைத்துதான் பின்னர் பாடலுக்கு இசையமைத்தார் யுவன் சங்கர் ராஜா. அவர் கொடுத்த பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் உதயநிதி ஸ்டாலின்.

