ராஜாராணி படத்தில் இயக்குனரான அட்லி, அதன்பிறகு விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் பிகில் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அடுத்தபடியாக தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை அட்லி இயக்குவார் என்று செய்திகள் வெளியாகி வந்தநிலையில், தற்போது பிரிடேட்டர், கமாண்டோ போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த பில் டியூக், அட்லியுடன் பணியாற்ற தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதனால் அடுத்தபடியாக ஜூனியர் என்டிஆர் – பில் டியூக் இருவரில் யார் நடிக்கும் படத்தை அடுத்து இயக்குவது என்று அட்லி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

