Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஹரிவராசனம் விருது பெற்றார் இளையராஜா

January 15, 2020
in Cinema
0

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கேரள அரசு கவுரவித்தது. சபரிமலை தேவசம் போர்டும், கேரள மாநில அரசும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த இசைக்கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி வருகிறது. சபரிமலையின் புகழை பரப்பும் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருதினை இதற்கு முன்னதாக, கே.ஜே.யேசுதாஸ், கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, பி.சுசீலா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதினை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் இன்று (ஜன.,15) விருது வழங்கப்பட்டது. விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணமும், Worshipful Music Genius என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக இளையராஜாவிற்கு விருது வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நடிகர் திலகம் தனுஷ்!

Next Post

அரசியலும், சமுதாயமும் கெட்டுப்போய் உள்ளது

Next Post

அரசியலும், சமுதாயமும் கெட்டுப்போய் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures