கமல், அஜித் தவிர தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை ஸ்ரேயா. தன், ரஷ்ய காதலர், ஆன்ட்ரி கொஸ்சீவ்வை மார்ச் 12-ம் தேதி ரகசிய திருமணம் செய்ததாக செய்தி வெளியானது.
அந்த செய்தி உண்மையாகி இருக்கிறது. ஸ்ரேயா – ஆன்ட்ரி மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
ஸ்ரேயாவின் மும்பை வீட்டில் இந்து முறைப்படி ரகசியமாக நடந்த இத்திருமணத்தில், இருவரது குடும்பத்தார், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.