சமீபகாலமாக வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் முன்னணி நட்சத்திரங்களும் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் சமந்தாவும் தற்போது சத்தமில்லாமல் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். அமேசான் பிரைம் ஒரிஜினல் தயாரிப்பில் ‘தி பேமிலி மேன்’ என்கிற வெப் சீரிஸ் பத்து எபிசோடுகளாக தயாரிக்கப்பட்டு தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் சாதாரண மனிதன் வேடத்தில் உலாவரும் ஒரு உளவாளி பற்றிய கதையாக உருவாகியுள்ளது. இந்தநிலையில் இதன் 2வது சீசனில் தான் நடிகை சமந்தா நடித்து வருகிறார் என்றும், இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. முற்றிலும் புதிய ஒரு கேரக்டரில் சமந்தா நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம்.

