ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டது பற்றி நடிகை கங்கனா மறைமுகமாக சாடி உள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அதில் அரசியல் மற்றும் சமூகத்தில் நடக்கும் விஷயங்களை பற்றி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
சில நேரங்களில் அவர் வெளியிடும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதும் உண்டு. அந்த வகையில் தற்போது ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டது பற்றி மறைமுகமாக சாடி உள்ளார் கங்கனா.
அவர் வெளியிடுள்ள பதிவில், “கடந்த 2014 ஆம் ஆண்டு போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஜாக்கிசானின் மகன் கைது செய்யப்பட்டபோது, ஜாக்கிசான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். அதனால் ஜாக்கிசானின் மகன் 6 மாதம் சிறையிலிருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். ஷாருக்கானும் தன் மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைத் தான் கங்கனா இவ்வாறு மறைமுகமாக பேசியிருப்பதாக தெரிகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]