பாகுபலி-2 படத்தை அடுத்து சாஹோ படத்தில் நடித்துள்ளார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் அபுதாபியில் முடிந்தது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை முடித்த கையோடு தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் பிரபாஸ். ராதா கிருஷ்ணா இயக்கும் இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இத்தாலி நாட்டில் நடந்து வருகிறது.
இப்படத்தில் பிரபாஸ் ஸ்டைலிசான தோற்றத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவர் மீசையே இல்லாமல் நடித்து வரும் போட்டோ ஒன்று வெளியாகி வைரலாகியிருக்கிறது.

