பிரபலங்கள் என்றாலே சமூக வலைத்தளங்களில் பலரும் பின்தொடர்வார்கள் .
அவர்களுக்கு இருக்கும் பிரபலம் அவர்களது வாரிசுகளுக்கும் இருக்கும். நட்சத்திரத் தம்பதியான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் தம்பதியினரின் மகளான ஆராத்யா, அவருடைய பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
மிகவும் தெள்ளத் தெளிவாக கணீர் குரலில் அவர் பேசிய பேச்சை ரசிகர்கள் ரசித்து ஷேர் செய்து வருகிறார்கள்.
அது போல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா, அவரது அப்பா நடித்து பொங்கலுக்கு வெளிவர உள்ள ‘சரிலேறு நீக்கெவரு’ படப் பாடலான ‘ஹீ இஸ் சோ க்யுட்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
குட்டி திறமைசாலிகளுக்கு அவர்களது அப்பாக்களின் ரசிகர்கள் வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

