பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் 7-ந்தேதி ரிலீசுக்கு தயாராகி விட்டது. இதற்கான புரொமோஷன் வேலைகள் டிவி மற்றும் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாகி உள்ளன. டுவிட்டரில் காலா எமோஜி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காலா படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அதையடுத்து, கண்ணம்மா என்ற பாடலின் புரமோ வெளியிடப்பட்டது. தொடர்ந்து சின்ன சின்ன புரொமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதில் ஒரு புரொமோவில், “நான் காலன், எமன், எமராஜ்” என்று ரஜினி பேசும் டயலாக் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகியிருக்கிறது.