2019ம் ஆண்டு முடிவிலும் கூட 2018ல் வெளிவந்த 96 படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 2018ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் சிலவற்றின் நிகழ்வு சமீபத்தில் நிறைவுற்றது. அதனால், 96 படம் பற்றிய செய்திகள் மீண்டும் வரத் தொடங்கின.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்தில் இருவரும் எளிமையான கதாபாத்திரங்களில் எளிய ஒரே உடையுடன் நடித்திருப்பார்கள். அதிலும் த்ரிஷா அணிந்த அந்த எல்லோ குர்தா மிகவும் பாப்புலர் ஆனது.
அது பற்றி த்ரிஷா கூறுகையில், “ஜானு கதாபாத்திரத்திற்காக எனக்குக் கிடைத்த வரவேற்பு பாராட்டு அனைத்துமே அதிகமானது? எதிர்பாராதது. ஒரு அற்புதமான கதாபாத்திரம் அது. அந்தக் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஜானு, ராம் கதாபாத்திரங்களை ரசிகர்கள் ரசிப்பார்கள் என நினைத்தேன். ஆனால், ஒரு எளிய எல்லோ குர்தா இந்த அளவிற்கு வைரலாகும் என நினைக்கவில்லை. அனைத்து விதமான ரசிகர்களுக்கும் அந்த ஆடை அதிகம் பிடித்துப் போனது.

