சினிமாவில் நடிக்க வந்த பின்தான் சில நடிகைகள் கிளாமர் ஆக, கவர்ச்சியாக ‘போஸ்’ கொடுத்து பரபரப்பை ஏற்படுத்துவார்கள். இந்த சமூக வலைத்தள யுகத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சிலரது தனிப்பட்ட புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஏற்கெனவே, நடிகர் ஷாரூக்கானின் மகளான சுஹானா கானின் சில புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இப்போது அவர் பிகினியில் போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் அவருடைய தம்பி ஆப்ராம், அவரது தோழர், தோழிகள் இருப்பதும் கொஞ்சம் அதிர்ச்சியாகவே உள்ளது.
ஐரோப்பா நாட்டில் சுஹானா, தற்போது விடுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாராம். 18 வயதே ஆன சுஹானா விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் ஏற்கெனவே வெளியானதுதான். இருப்பினும் ஷாரூக்கான் அவருடைய மகள் சுஹானா, மகன் ஆர்யன் ஆகியோர் ஒரு டிகிரி வாங்கிய பின்தான் நடிக்க வர வேண்டும் என ஷாரூக்கான் கட்டுப்பாடு விதித்துள்ளார். அதனால், நடிகையாக சுஹானா இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
