கடந்த சில நாட்களாக பாலிவுட் வட்டாரத்தில் கடும் புகைச்சலை கிளப்பிவிட்டுள்ளது நடிகர் நானா படேகரின் மீதான தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் குற்றச்சாட்டு. 2009-ல் நானா படேகர் நடித்த ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்கிற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்காக தனுஸ்ரீ தத்தாவை ஒப்பந்தம் செய்திருந்தார்களாம்.
ஆனால் நடனக் காட்சியின்போது நானா படேகர், தனுஸ்ரீ தத்தாவிடம் தவறாக நடந்து கொண்டார் என சமீபத்தில் குற்றம் சாட்டினார் தனுஸ்ரீ தத்தா. தற்போது தனுஸ்ரீக்கு எதிராக நானா படேகரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதேசமயம் 2௦௦9ல் அந்த நிகழ்வு நடந்த சில நாட்கள் கழித்து தனுஸ்ரீ தத்தாவின் கார்மீது நானா படேகரை அவதூறாக பேசியதாக அவரது ரசிகர்கள் தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் போலீஸ் வந்து அவரை மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை, இப்போது யாரோ ஒருவர், நானா படேகரின் இமேஜை டேமேஜ் பண்ணும் விதமாக சோஷியல் மீடியாவில் பரவவிட, தற்போது செம வைரலாகி வருகிறது அந்த வீடியோ.