விஜய் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரம், சாய்ராம் கல்லூரியில் நடந்தது. விழாவில் பேசிய இப்படத்தில் நடித்துள்ள நடிகை வரலட்சுமி, விஜய் படம், முருகதாஸ் இயக்கம், ரஹ்மான் இசை… என என் எல்லா கனவுகளும் ஒரே படத்தில் நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் விஜய்யின் வெறியை, அவருடைய படத்தை தியேட்டருக்கு போய் பார்த்து கை தட்டி, விசில் அடித்து ரசித்திருக்கிறேன். அவரை பற்றி யாராவது தவறாக பேசினால் சண்டைக்கு போவேன். லாஸ் வேகாஸில் வெளிநாட்டுக்காரர் ஒருவர் அவரை தவறாக பேசினார். நான் சண்டைக்கு போய்விட்டேன். இது விஜய்க்கும் தெரியும் என்றார்.