விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ள படம் ‛ஆதித்ய வர்மா’. தெலுங்கு அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இந்த படத்தை, ‛வர்மா’ என்ற பெயரில் பாலா முதலில் இயக்கினார். அவர் இயக்கியது தங்களுக்கு திருப்தி இல்லை என்று அந்த படத்தை தயாரித்த நிறுவனம் அதை கிடப்பில் போட்டு விட்டு, கிரிசய்யாவை வைத்து ‛ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் மீண்டும் படமாக்கியது.
அதையடுத்து வேகமாக படப்பிடிப்பு தொடங்கி படமும் சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது. சென்சார் பிரச்னையால் ரிலீஸ் தேதி தாமதமானது. சமீபத்தில் ஏ சான்று பெற்ற படம் நவ., 21ல் வெளியாகும் என அறிவித்தனர். இப்போது, நவ., 22க்கு படத்தை தள்ளி வைத்துள்ளனர்.
அதேசமயம், இந்தியாவில் இந்த தேதியில் வெளியாகும் ஆதித்ய வர்மா, வெளிநாடுகளில் ஒருநாள் முன்பே அதாவது நவ., 21ல் வெளியாகிறது. துருவ் விக்ரம் உடன் பனிதா சந்து, பிரியா ஆனந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

